குடிநீர் தொட்டி சரி செய்யப்படுமா?

Update: 2023-08-02 15:45 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட கவுனூர் செல்லும் சாலையில் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் தொட்டி பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதைப் பற்றி பலமுறை பேரூராட்சியில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் பழுதடைந்த குடிநீர் தொட்டியை சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜனார்த்தனன், மாரண்டஅள்ளி.

மேலும் செய்திகள்