குடிநீர் வசதி வேண்டும்

Update: 2022-07-24 12:31 GMT
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்க உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பகுதி மக்களும் அதிகளவில் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் அமைக்கப்பட்டது. இதனால் சுகாதார நிலையத்துக்கு வருபவர்கள் மிகுந்த பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக குடிநீர் எந்திரம் செயல்படாமல் காட்சி பொருளாக இருக்கிறது. இதனால்  சிகிச்சைக்கு வருபவர்கள் கடைவீதி, பஸ் நிலைய பகுதிக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்