குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2023-02-26 08:17 GMT

நெல்லை கொக்கிரகுளம் புது அம்மன் கோவில் அருகில் மெயின் ரோட்டில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள தெருக்குழாயிலும், வீட்டு குடிநீர் இணைப்புகளிலும் குறைந்தளவே தண்ணீர் வருவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே குழாய் உடைப்பை சரி செய்து, சீராக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்