மதுரை மாவட்டத்தில் வைகை நதியானது விரகனூர் அணையில் தேக்கி வைத்து பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக வினியோகிக்கபடுகிறது. இந்நிலையில் இந்த அணையில் ஆகாயத்தாமரைச் செடிகளானது அதிக அளவில் வளர்ந்துள்ளது. இந்த ஆகாயாத்தாமரைகளானது தண்ணீரை மாசுபடுத்தி அதில் உள்ள மீன்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி அணையை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.