புவனகிரி அருகே வாண்டியாங்குப்பம் கிராமத்தில் உள்ள தாமரைக்குளத்தில் செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் அதில் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நிலத்தடி நீர் மட்டமும் குறையும் அபாயம் உள்ளது. எனவே குளத்தை தூர்வார வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.