விருதுநகர் மாவட்டம் பாவாலி கிராமம் அருகே கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் நீரை இப்பகுதி விவசாயிகள் பாசனத்திற்கு பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த கண்மாயின் மதகானது உடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த கண்மாய்க்கு நீர் வந்தால் உடைந்த மதகு வழியாக தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் இந்த கண்மாயில் நீரானது தேங்காமல் கருவேல மரங்கள் வளர்ந்து காட்சியளிக்கிறது. ஆதலால் இப்பகுதி விவசாயிகள் பாசனத்திற்கு நீர் இல்லாமல் சிரமப்படுகிறார்கள். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உடைந்த கண்மாய் மதகை சீரமைத்து நீர் தேங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.