விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா குல்லூர் சந்தை புதிய காலனியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி சேதமடைந்து உள்ளது. இதன் அருகே அங்கன்வாடி மையம் உள்ளது. சேதமடைந்த குடிநீர்தொட்டியால் அங்குள்ள குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும்.