கோபி டவுன் வாய்க்கால் ரோடு வீதியில் அங்கன்வாடி மையம் அருகே உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. ரோட்டில் ஆறு போல் பெருக்கெடுத்து செல்கிறது. மேலும் குழாய் அருகே கம்பி வலைக்குள் மின்மாற்றியும் உள்ளது. இதனால் பேராபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உடைந்த குழாயை சரி வவவசெய்து பேராபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.