ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா?

Update: 2022-08-22 12:26 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கழுமலை ஆறு பாசன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் மூலம் சீர்காழி அகணி, கொண்டல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சார்ந்த விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த நிலையில் கழுமலை ஆறு பாசன வாய்க்கால் முழுவதும் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதன்காரணமாக விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பாசன வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்