மயிலாடுதுறை துலாக்கட்டம் அருகே காவிரி திம்மநாயக்கன் படித்துறையில் இருந்து சிறிது தூரத்தில் ஆறுபாதி வாய்க்கால், மன்னம்பந்தல் வாய்க்கால் உள்ளன. இந்த 2 வாய்க்கால்களும் தூர்வாரப்படாமல் புதர்மண்டி கிடக்கின்றன. இதன்காரணமாக வாய்க்காலுக்கு தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது. இதனால் அதை சார்ந்துள்ள விளைநிலங்கள் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கின்றன. விவசாயிகள் பாசனத்துக்கு தண்ணீர் இல்லாமல் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள வாய்க்கால்களை தூர்வாரி விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?