ஈரோடு சத்திரோட்டில் சாலை விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது. வீரப்பன்சத்திரம் பகுதியில் சாலை அமைக்க குழி தோண்டப்பட்டது. அப்போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யும்போது தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.