வீணாகும் குடிநீர்

Update: 2022-08-18 12:47 GMT
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி வாய்மேடு கடைத்தெருவில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வீணாக செல்கிறது. மேலும், குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பினால் அந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களுக்கு முறையாக தண்ணீர் செல்வதில்லை. இதன்காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் வீணாவதை தடுக்க குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்