தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதி திருவலஞ்சுழியை அடுத்த மணப்படையூர் கிராமத்தில் வாய்க்கால் தூர்வாரப்பட்டு தயார் நிலையில் உள்ளது. ஆனால் தற்போது வரை வாய்க்காலுக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள வாய்க்காலுக்கு தண்ணீர் வருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?