புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நீண்ட நாட்களாக தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் குடிப்பதற்கும், மற்ற தேவைகளுக்கும் தண்ணீர் டிரம் ரூ.200 என்று பணம் கொடுத்து தண்ணீர் வாங்குகின்றனர். இது தொடர்பாக மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி தெருக்குடிநீர் குழாய்கள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.