சென்னை தண்டையார்பேட்டை வ.உ.சி. நகர் பிரதான சாலையில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. பாதாள சாக்கடைக்கு அருகிலேயே குடிநீர் குழாயும் இருப்பதல், குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் இந்த பாதாள சாக்கடை பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.