குளம் தூர்வாரப்படுமா?

Update: 2022-06-27 14:47 GMT
சென்னை நசரத்பேட்டை அடுத்த அகரமேல் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். தெரு, இந்திரா தெரு ஆகிய நான்கு தெருக்களை சூழ்ந்துள்ள பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கெங்கையம்மன் கோயில் குளத்தில் பாசி செடிகள் அதிக அளவில் படர்ந்து உள்ளது. இதனால் குளத்தில் உள்ள தண்ணீர் அசுத்தமாக மாறி வருவதோடு சுகாதாரமற்ற நிலையிலும் இருக்கிறது. மேலும் குளத்தை சுற்றி தடுப்பு சுவர் அமைக்கப்படாததால், குளத்திற்கு அருகே விளையாடும் குழந்தைகள் குளத்தில் தவறி விழுந்து காயம் ஏற்படும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் குளத்தை தூர்வாரி தருவதோடு, குளத்தை சுற்றி தடுப்பு சுவர் கட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்