தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே சுங்கரஅள்ளியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி மாணவர்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் அது இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. மின்மோட்டாருக்கு இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பல ஆண்டுகளாக காட்சிப்பொருளாகவே இருக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-மணிவாளன், சுங்கரஅள்ளி, தர்மபுரி.