புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனைத்து வகையான உயர்தர சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் தினமும் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் போதியளவு குடிநீர் வசதி இல்லாததால், நோயளிகள், உடன் வருபவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மருத்துவமனையில் போதிய குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.