உத்தமபாளையம் தாலுகா கோம்பை பேரூராட்சி 12-வது வார்டு பகுதியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக குடிநீர் வெளியேறி சாலையில் வீணாக செல்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் போதுமான அளவு குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே குழாய் உடைப்பை விரைந்து சரிசெய்ய வேண்டும்.