பெரும்பாலை ஊராட்சிக்குட்பட்ட கோடம்பட்டியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் தேவைக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. இந்த தொட்டியானது தற்போது சேதமடைந்து, தூண்களில் வெடிப்பு ஏற்பட்டு உள்ளது. எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் சூழ்நிலையில் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. எனவே பெரும் அசம்பாவிதம் நிகழும் முன், இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்தி விட்டு, புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அமைக்க வேண்டும்.
-திருக்குமார், பூச்சூர்.