ஏரியூர் அருகே உள்ள பெரும்பாலையில் சுமார் கிட்டத்தட்ட 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் தேவைக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம், குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, பஸ் நிலையம் பகுதிக்கு குடிநீர் வழங்கும் குழாய் உடைந்து நீர் வீணாகி, சாலையில் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இது குறித்து ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. எப்போது தான் இதற்கு தீர்வு கிடைக்குமோ? என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
-சிவா, பெரும்பாலை.