மேட்டூர் அருகே ஓலைப்பட்டி கிராமம் பாரப்பட்டி பகுதியில் மேட்டூர் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. மேலும் தண்ணீர் அந்த பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பையில் கலக்கிறது. இதனால் இந்த பகுதியில் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, மக்கள் பல நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாயை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுத்து, குப்பைகளை அகற்ற வேண்டும்.
-முருகேசன், பாரப்பட்டி.