பர்கூர் தாலுகா பட்லப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களின் குடிநீர் வசதியை பூர்த்தி செய்யும் வகையில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேல் பகுதியில் முறையான மூடியை அமைக்காமல் பிளாஸ்டிக் பைகளை போட்டு மூடி வைத்துள்ளனர். இந்த பிளாஸ்டிக் பைகள் சரியாக மூடப்படாத காரணத்தினால் இந்த குடிநீர் தொட்டியில் பறவைகளின் கழிவுகளும், இலைகளும் சேருகின்றன. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு மூடி அமைக்க வேண்டும்.
-மாதையன், பர்கூர்.