சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள ஓக்கியம் துரைப்பாக்கம் அருகே கண்ணகி நகர் மற்றும் எழில் நகர் செல்லும் வழியில் உள்ள நீர் தேக்க தொட்டி சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த பகுதியை கடந்து செல்லும் மக்கள் அச்சத்துடன் தான் பயணம் செய்கிறார்கள். எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.