சென்னை புளியந்தோப்பு நெடுஞ்சாலை செல்லும் வழியில் உள்ள ஜாபர்கான் தெருவில் இருக்கும் பள்ளிவாசல் அருகே மழைநீர் கால்வாய்க்காக பள்ளம் தோண்டப்படும் போது எதிர்பாராத விதமாக குடிநீர் குழாய் சேதமடைந்து குடிநீர் வீணாவது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எடுத்த உடனடி நடவடிக்கையால் குடிநீர் குழாய் மாற்றப்பட்டுள்ளது. விரைந்து செயல்பட்ட ஊழியர்களுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.