தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா ஆலாபுரம் ஊராட்சியில் உள்ள புதுமோட்டூர் பகுதியில் சாலையோரம் குடிநீர் குழாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் இதுவரை குடிநீர் குழாய் அமைக்கப்படவில்லை. குடிநீர் குழாய் அமைக்கும் பணி பாதியில் நிற்பதால் சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோரும், பொதுமக்களும் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக குடிநீர் குழாயை அமைத்து பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பிராகாஷ், தர்மபுரி.