சென்னை புளியந்தோப்பு நெடுஞ்சாலை செல்லும் வழியில் உள்ள ஜாபர்கான் தெருவில் இருக்கும் பள்ளிவாசல் அருகே மழைநீர் கால்வாய்க்காக பள்ளம் தோண்டப்பட்டது. பள்ளம் தோண்டப்படும்போது எதிர்பாராத விதமாக அந்த இடத்தில் இருந்த குடிநீர் குழாய் சேதமடைந்துவிட்டது. இதனால் குடிநீர் வீணாவதுடன், கடந்த 25 நாட்களாக அந்த பள்ளத்தில் குடிநீர் தேங்கி வருகிறது. இந்த பிரச்சினையை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.