சென்னை எழும்பூர் அருங்காட்சியத்தை சுற்றி பார்க்க தினமும் ஆயிரணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். ஆனால் அடிப்படை வசதியான குடிநீர் வசதி கூட இந்த அருங்காட்சியத்தில் செய்து தரப்படவில்லை. இது வெயில் காலம் என்பதால் தண்ணீரின் தேவை அதிகமாகவே இருக்கும். சென்னையின் முக்கியமான இடங்களில் ஒன்றான இந்த அருங்காட்சியத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை. மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?