திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, முத்தரசநல்லூர் முத்தமிழ்புறம் தெருவில் கடந்த ஒரு வாரமாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.