திருச்சி மாவட்டம், பொன்மலைப்பட்டியில் உள்ள அடைக்கல அன்னை நகர் பகுதியில் 15 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் தங்களின் அன்றாட தேவைக்கு போதுமான அளவு தண்ணீர் இன்றி பெரிதும் தவித்து வருகின்றனர். மேலும் தண்ணீர் பற்றாக்குறையால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.