வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2022-08-08 14:23 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதி பண்டாரவாடையை அடுத்த நெய்குப்பை கிராமத்தில் உள்ள வாய்க்கால் மற்றும் குளங்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால்அருகே உள்ள வீரசோழன் ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டாலும் பயனற்ற நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் தண்ணீரின்றி வறண்டுவிடுவதால் விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட கிராமத்தில் உள்ள வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்