மினி குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-08 13:13 GMT
விருத்தாசலம் சக்தி நகர் பாரதி சாலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி சார்பில் மினி குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த மினி குடிநீர் தொட்டி முறையான பராமரிப்பின்றி முற்றிலும் சேதமடைந்தது. தற்போது பயன்பாடின்றி வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், குடிநீர் கிடைக்காமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ஆகவே விருத்தாசலம் நகராட்சி நிர்வாகம், உடனடியாக நடவடிக்கை எடுத்து மினி குடிநீர் தொட்டியை சீரமைத்து, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்

மேலும் செய்திகள்