திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், ஆலத்துடையான்பட்டி ஊராட்சி மாரியம்மன் கோவில் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மிகவும் சிதிலமடைந்து பலவீனமான நிலையில் உள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, கட்டி 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளது. மெயின் ரோட்டை ஒட்டி உள்ள இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.