சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பட்டமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகுகிறது.. சாலையில் தேங்கிய தண்ணீரால் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் இப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.