நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சியில் நாட்டார் மங்கலம் உள்ளது. இந்தப் பகுதியில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள அனைத்து தரப்பினரும் குடிநீரின்றி மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் குடிநீருக்காக பொதுமக்கள் நீண்ட தூரம் பயணம் செய்து குடங்களில் தண்ணீர் பிடித்து வருகின்ற சூழல் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?