ரெயில் நிலையத்தில் காட்சி பொருளாக குடிநீர் தொட்டிகள்

Update: 2022-08-07 14:44 GMT
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தின் வழியாக தினமும் பயணிகள் மற்றும் விரைவு ரெயில் சென்று வருகின்றன. இதனால் நீடாமங்கலம் ரெயில் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். ரெயில் நிலையத்தில் போதிய குடிநீர் வசதி இல்லை. முதலாவது நடைமேடையில் மட்டும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2-வது மற்றும் 3-வது நடைமேடைகளில் தொட்டிகள் அமைக்கப்பட்டு குழாய்கள் பொருத்தப்படாமல் காட்சி பொருளாக உள்ளன. இதனால் விலை கொடுத்து குடிநீர் வாங்க வேண்டிய நிலை உள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து காட்சி பொருளாக உள்ள குடிநீர் தொட்டியை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்