செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அண்ணா பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாதது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் சுட்டிகாட்டப்பட்டது. இதனை அடுத்து நகராட்சி சார்பில் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்தின் சீரிய நடவடிக்கைக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் மக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.