சென்னை ஆதம்பாக்கம் மஸ்தான் கோரி தெருவில் 4 தண்ணீர் தொட்டிகள் உள்ளன. ஆனால் இந்த 4 தண்ணீர் தொட்டிகளில் ஒரு தொட்டியில் மட்டும் கடந்த 6 மாதங்களாக தண்ணீர் வரவில்லை. இது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. குடிநீர் வாரியத்தின் உடனடி நடவடிக்கையால் தற்போது தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் நடவடிக்கை எடுத்த குடிநீர் வாரியத்துக்கும் செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் பாராட்டை தெரிவித்துள்ளனர்.