சென்னை புத்தகரம் கொளத்தூர், ரங்கநாதன் தெரு முதல் தெருவில் உள்ள தனியார் மேல்நிலை பள்ளி பின்புறம் ஒரு தண்ணீர் தொட்டி உள்ளது. இந்த தண்ணீர் தொட்டி உடைந்த நிலையில் உள்ளதால், எங்கள் பகுதி மக்கள் குடிநீர் எடுப்பதற்கு நீண்ட தூரம் பயணம் செய்யும் சூழல் ஏற்படுகிறது. நீண்ட நாட்களாகியும் உடைந்த தண்ணீர் தொட்டி சரி செய்யப்படவில்லை. மேலும் இது வெயில் காலம் என்பதால் எங்கள் பகுதி மக்களின் நலன் கருதி விரைவில் தண்ணீர் தொட்டியை சரி செய்து, தடையின்றி தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.