சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகர் 12-வது குறுக்குத் தெருவில் நீண்ட காலமாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. யாரும் கண்டுகொள்ளவும் இல்லை. குடிநீருக்காக வேறு தெருவிற்கு சென்று காத்திருந்து பிடித்து வர வேண்டிய நிலையுள்ளது. அத்தியாவசிய தேவைக்கு அலைவது ஏன்? குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வகையில் அதிகாரிகள் கவனித்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.