விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் சுந்தரபாண்டியம் அருகே செங்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் அப்பகுதி மக்களின் விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. இந்த கண்மாயில் நீரை சேமிப்பதன் மூலம் பல ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும். தற்போது இந்த கண்மாயில் கருவேல மரங்கள் சூழ்ந்து நீர் இருப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே இந்த கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.