தடுப்பணை கட்டித் தருவார்களா?

Update: 2022-08-05 14:48 GMT

ராமநாதபுரம் மாவட்டம் சேதுக்கரை அருகே கொட்டகுடி ஆற்றில் கடல் நீர் புகுவதை தடுத்து மழை நீரை தேக்கி வைக்க தடுப்பணை கட்ட வேண்டும் .இந்த ஆற்றில் மழை நீரை தேக்குவதன் மூலம் சேதுக்கரை, சின்னக்கோயில், மேலப்புதுக்குடி, கோரைக்குட்டம், பிரச்சாவலசை உள்ளிட்ட கிராமங்கள் நீர் வரத்து பெறும். மேலும் இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும். எனவே மழை நீரை சேமிக்க தடுப்பணை கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்