தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா மாதேஹள்ளி ஊராட்சியில் பிள்ளப்பநாயக்கனஹள்ளியில் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் முன்பு மழைக்காலங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அங்கு மழைநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
-விஸ்வநாதன், தர்மபுரி.