சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் காவலர் குடியிருப்பில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக காவிரி குடிநீர் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதி மக்களின் நலன்கருதி சீராக குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?