அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் கைக்களநாட்டார் தெருவில் வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் வீட்டின் உள்ளே செல்லும் அவலநிலை உள்ளது. தற்போது அடிக்கடி மழை பெய்து வருவதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.