திருச்சி மாவட்டம், பெரியமிளகுபாறை கள்ளர்தெரு மெயின்ரோடு அருகே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறி இதன் அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் வீணாக செல்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.