சென்னை காசிபுரம், 'பி' பிளாக் 6-வது தெருவில் உள்ள குடிரீர் குழாய்களில் வரும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் எங்கள் பகுதி மக்கள் சுகாதாரமற்ற குடீநீரை தான் தினமும் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் பலருக்கும் உடல் உபாதைகள் ஏற்படுகிறது. எனவே எங்கள் பகுதி மக்களுக்கு சுகாதாரமான நீர் கிடைப்பதற்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.