தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியை அடுத்த எம்.செட்டிஅள்ளி கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தண்ணீர் சுத்திகரிப்பு எந்திரம் அமைக்கப்பட்டது. இந்த எந்திரம் கடந்த 2 ஆண்டுகளாக செயல்படாமல் அப்படியே காட்சி பொருளாகவே இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்திரத்தை சரி செய்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-மாரியப்பன், எம்.செட்டிஅள்ளி, தர்மபுரி.