திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் டி.கள்ளிக்குடி கிராமத்தில் ஏராளமான ெபாதுமக்கள் வசித்து வருகின்றனா். இங்கு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ேமல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கடந்த சில நாட்களாக நாட்களாக குடிநீர் உப்பாக வருகிறது. இதனால் பொதுமக்கள் அந்த குடிநீரை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.