திருச்சி மாவட்டம், தி௫வெறும்பூர் பகுதியில் உள்ள தெற்கு விஸ்தரிப்பு இந்தரா ந௧ர் பகுதியில் ஏராளான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் பைப்லைன் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த குடிநீர் குழாய்களில் மாதந்தோறும் உடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதி மக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இதற்கு ஒரு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.